நேர்மைக் கலாசார வாரம் 2026 – முதல் நாள் நிகழ்வு

(நிறுவன ரீதியான நேர்மையை மேம்படுத்தும் நாள்)

நேர்மைக் கலாசார வாரம் 2026 (27.07.2026 – 31.07.2026) நிகழ்வுகளின் முதல் நாளான நிறுவன ரீதியான நேர்மையை மேம்படுத்தும் நாள்"* இன்று கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகம் – வாகரையில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

காலை 9.00 மணிக்கு, பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் **நேர்மை உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, நேர்மையான, பொறுப்புணர்வுமிக்க மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட அரச சேவையை வழங்குவதற்கான தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, பிரதேச செயலாளர் அவர்களால் நேர்மைக் கலாசாரம் – தூய்மையான இலங்கை தேசிய செயற்பாட்டினை எமது அலுவலகத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், அரச சேவையில் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல், ஊழலற்ற மற்றும் முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குதல், பொதுமக்களுக்கு நம்பிக்கைக்குரிய சேவையை வழங்குதல் ஆகிய விடயங்கள் குறித்து அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. மேலும் GN, CEO, SDO ஆகிய உத்தியோகத்தர்களும் தத்தமது பிரிவுகளில் நேர்மை சத்தியபிராமணத்தினை மேற்கொண்டனர்.

நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த நிர்வாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் நோக்கில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகம் – வாகரை தொடர்ந்தும் உறுதியாக செயல்பட்டு வருகிறது.WhatsApp Image 2026 07 27 at 09.38.05 2WhatsApp Image 2026 07 27 at 09.38.02 1WhatsApp Image 2026 07 27 at 09.38.02WhatsApp Image 2026 07 27 at 11.23.11 1WhatsApp Image 2026 07 27 at 11.23.11

Scroll To Top