சர்வதேச மகளிர் தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு.எந்திரி G.அருணன் அவர்களின் தலைமையில் வாகரை கலாசார மண்டபத்தில் (08.03.2023) நடைபெற்றது.
இந் நிகழ்வின் போது மகளிர் சங்க உறுப்பினர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு அவர்களுக்கான பரிசில்களும்,சிறந்த மகளிர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
அத்தோடு சுயதொழில் முயற்சியினை ஊக்குவிக்கும் முகமாக பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களும் மகளீருக்கான எல்லே போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம் பெற்ற எமது வீராங்கனைகளுக்கான கெரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு.G.பிரணவன், கணக்காளர் திருமதி.C.ஜெயந்திரா,
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி கலைவாணி. சமூக சேவை உத்தியோகத்தர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. N.ரமேஷ், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


































