2024 ஆம் ஆண்டு – கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்.
பிறந்துள்ள புத்தாண்டு 2024ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வானது கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் க.அருணன்அவர்கள் தலைமையில் 2024.01.01 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது.
சம்பிரதாயபூர்வமாக தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் பாடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் நாட்டுக்காக உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி நினைவுகூறப்பட்டது. தொடர்ந்து உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாண உறுதியுரை ஏற்றுக்கொண்டதுடன் பிரதேச செயலாளர் அவர்களால் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வலுவான எதிர்காலத்திற்கான நல்லதொரு ஆரம்பம் எனவும் குறிக்கோள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் பிரதேச செயலாளரினால் உரையாற்றப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் கு.பிரணவன் , பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அ .சுதர்சன், நிருவாக உத்தியோகத்தர் வ . சிவரஞ்சன், சமுர்த்தி முகாமையாளர் க.கலைவாணி உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.




















