Home
Create a post
Stories
Feed posts
Facebooநேர்மை கலாசார வாரம் 2026 – நாள் 02
நேர்மை கலாசாரம் – நடைபவனியில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்கேற்பு
நேர்மை வாரம் 2026 இன் இரண்டாவது நாளான இன்று, நேர்மை கலாசாரம் (Integrity Culture) கிளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடைபவனி சிறப்பாக இடம்பெற்றது.
நேர்மை, பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நடைபவனியில், கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கினர்.
"இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்ப்போம்" என்ற கருத்தை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பங்கேற்றனர்.
இந்நடைபவனி மூலம் ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை அதிகரித்தல், நேர்மையான சேவை கலாசாரத்தை மேம்படுத்தல் மற்றும் பொது சேவையில் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் போன்ற முக்கிய நோக்கங்கள் வலியுறுத்தப்பட்டன.
















