வாகரை கலாசார மத்திய நிலையம்  11.03.2022 அன்று உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.இதில் பிரதம அதிதியாக தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரம நாயக அவர்கள் கலந்துகொண்டார்.ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர் குமரஸ்ரீ, வாகரை பிரதேச சபை தவிசாளர் ஆகியோரும்  எமது பிரதேச செயலாளர்,உதவி பிரதேச செயலாளர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர்,கணக்காளர், சக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் முதல் நிகழ்வாக பிரதம அதிதியினால்  கலைஞர்கள் வரவேற்கப்பட்டனர். கலைஞ்சர்களால் கட்டிடடம்  திரை  நீக்கம் செய்யப்பட்டது. பிரதம அதிதியினால் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது. அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றபட்டு  வரவேற்பு உரை பிரதேச செயலாளரால் நிகழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து கலை கலாசார நிகழ்வுகள் ஆரம்பமானது. நிகழ்வின் முடிவில் பங்குபற்றிய மாணவர்களுக்கான கலாசார உபகரணங்கள் விழங்கிவைக்கப்பட்டன.

 

WhatsApp Image 2022 03 11 at 20.32.13

 

WhatsApp Image 2022 03 11 at 20.32.17

   
   

 

vWhatsApp Image 2022 03 11 at 20.32.19

 

Scroll To Top