நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கௌரவ ஆணையாளர் உடனான சந்திப்பு
நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கௌரவ ஆணையாளர் Mr .Namal Liyanage வாகரை பிரதேசத்திற்கு கள விஐயத்தினை மேற்கொண்டார்.அவருடன் Miranda Amstrong - chief of child protection, Andrew- consultant UNICEF. ஆகியோர் வருகைதந்தருந்தனர்
பிரதேச செயலாளர் எந்திரி. G. அருணன் தலைமயில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் A.அழகுராஐ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச சிறுவர்சபை சிறார்களால் வரவேற்கப்பட்டனர்.
இவ் விஐயத்தின் போது ஏற்கனவே unicef அனுசரனணயுடன் PPC நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 30 நலிவுற்ற குடும்பங்களுக்கு 40000/= ௹பாய் பெறுமதியான உலர் உணவு> கற்றல் உபகரணங்கள் மற்றும் 07 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதை பார்வையிட்டதுடன் தொடர்ச்சியான சிறுவர் முன்னேற்றம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு ஊடாக வாகரை பிரதேச சிறுவர் பாதுகாப்பு செயற்பாடுகள் , எதிர்நோக்கும் பிரச்சனைகள் , சவால்கள் என்பன தெளிவுபடுத்தப்பட்டது .
























