பொங்கல் விழா - 2024

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகமும் சமுக அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த பொங்கல் விழா நிகழ்வானது இன்று (07) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக வழாகத்தில் பிரதேச செயலாளர் அருணன் தலைமையில் வழிபாடு பாரம்பரிய விளையாட்டுக்கள் என பல பாரம்பரிய நிகழ்வுகளுடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக மற்றும் சமுக அமைப்புகளின் பல வகையான பொங்கல் பானைகள் நிகழ்வை அலங்கரித்ததோடு கயிறிழுத்தல்,கோலம் போடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம் பெற்றது.
இதில் அதிதிகள் கிராம மட்ட சமுக அமைப்புகள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது .
 
Scroll To Top