கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்தின் சிறுவர் அபிவிருத்திக்குழுவின் செயலாளரும் ,சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தருமாகிய அ.அழகுராஐ் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எந்திரி. க. அருணன் , தலைமயில் உதவிப் பிரதேசசெயலாளர் கு. பிரணவன் பங்குபற்றுதலுடன் இவ்வருடத்திற்கான மூன்றாம் காலாண்டுக்கான பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.
குறிப்பாக பாடசாலை இடைவிலகலை குறைப்பது தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட நான்கு பாடசாலைகளில் விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்தல் , போசனை குறைபாட்டை குறைப்பதற்கான வேலைத்திட்டம் , இளவயது திருமணத்தை குறைப்தற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை பெற்றோர் சமூகத்திற்கு நடாத்துதல் , நிறுவனங்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டினுடாக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தல் , சிறுவர் இல்ல அனுமதியை குறைத்தல் , சிறுவர் சட்ட நடைமுறைகளை அமுல்படுத்தல் போன்ற தீர்மானமங்கள் முன்னெடுக்கப்பட்டது .
இந் நிகழ்வில் வலயக்கல்வி அதிகாரி, சிறுவர் பெண்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி, நன்டத்தை உத்தியோகத்தர் , அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .




















