பொதுமக்கள் விழிப்புணர்விற்காக
கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகம், வாகரை
நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுமிக்க பொது சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகம், வாகரை இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துகிறது. இலஞ்சம் வழங்குவதும் பெறுவதும் சட்டவிரோதமான செயலாகும். நேர்மையை கடைப்பிடித்து, ஊழலற்ற சமூகத்தை உருவாக்குவதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கிய பங்கு உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இலஞ்சம் மற்றும் ஊழலை நிராகரித்து, நியாயமான மற்றும் வெளிப்படையான சேவையை நிலைநாட்ட எங்களுடன் இணைந்து செயல்படுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
"நேர்மை நம் பலம் – ஊழலற்ற சமூகம் நம் இலக்கு."





















