Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குNews & Events
அரசு சேவை மையங்கள்
முகப்பு
Integrity Culture Week 2026
- பிரிவு: News & Events
நேர்மைக் கலாசார வாரம் 2026 – முதல் நாள் நிகழ்வு
(நிறுவன ரீதியான நேர்மையை மேம்படுத்தும் நாள்)
நேர்மைக் கலாசார வாரம் 2026 (27.07.2026 – 31.07.2026) நிகழ்வுகளின் முதல் நாளான நிறுவன ரீதியான நேர்மையை மேம்படுத்தும் நாள்"* இன்று கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகம் – வாகரையில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
காலை 9.00 மணிக்கு, பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் **நேர்மை உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, நேர்மையான, பொறுப்புணர்வுமிக்க மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட அரச சேவையை வழங்குவதற்கான தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, பிரதேச செயலாளர் அவர்களால் நேர்மைக் கலாசாரம் – தூய்மையான இலங்கை தேசிய செயற்பாட்டினை எமது அலுவலகத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், அரச சேவையில் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல், ஊழலற்ற மற்றும் முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குதல், பொதுமக்களுக்கு நம்பிக்கைக்குரிய சேவையை வழங்குதல் ஆகிய விடயங்கள் குறித்து அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. மேலும் GN, CEO, SDO ஆகிய உத்தியோகத்தர்களும் தத்தமது பிரிவுகளில் நேர்மை சத்தியபிராமணத்தினை மேற்கொண்டனர்.
நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த நிர்வாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் நோக்கில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகம் – வாகரை தொடர்ந்தும் உறுதியாக செயல்பட்டு வருகிறது.




Dengue sirmadhana
- பிரிவு: News & Events
📢 23.07.2026
இன்று எமது கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தின் வெளிப்புற சூழலில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
அலுவலக வளாகத்தை சுத்தம் செய்தல், டெங்கு கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களை அகற்றல் மற்றும் தூய்மையான, ஆரோக்கியமான பணிச் சூழலை உருவாக்கும் நோக்கில் உத்தியோகத்தர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.




Drug prevention program
- பிரிவு: News & Events
08.07.2026 அன்று வாகரை VTA மையத்தில், VTA மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பயிற்சி அமர்வு நடத்தப்பட்டது.























