Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குNews & Events
அரசு சேவை மையங்கள்
முகப்பு
சர்வதேச மகளிர்தின நிகழ்வு 2025
- பிரிவு: News & Events








கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பதவியணியினர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடல்
- பிரிவு: News & Events
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பதவியணியினர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடல்
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பதவியணியினர் நலன்புரிச்சங்க வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் சேவைநலன் பாராட்டு விழாவானது பனிச்சங்கேணி அரச சுற்றுலா விடுதியில் காலை 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு. G.அருணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திரு. G. பிரணவன், கணக்காளர் திருமதி.சந்திரகலா ஜெயந்திரா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி கலைவாணி கஜேந்திரன் , நிருவாக உத்தியோகத்தர் திரு.அப்துள் சமது ஜெமில், அலுவலக உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு இடமாற்றம் பெற்றுச் சென்ற முன்னால் கணக்காளர் திரு.து.ஜோர்ச் ஆனந்தராஜ் , முன்னால் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.சுதாகரன் மற்றும் ஏனைய இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
மங்கள விளக்கேற்றலோடு ஆரம்பித்து தொடர்ச்சியாக கலை நிகழ்வுகள், இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களுக்கான பாராட்டு மற்றும் கௌரவித்தல், கடந்த அரசாங்க அதிபர் கிண்ணத்தில் எல்லே போட்டியில் வெற்றியீட்டி முதலிடத்தைப் பெற்ற அணியினர் கௌரவிப்பு என நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.















2023 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கான கடமை ஏற்றல் நிகழ்வு
- பிரிவு: News & Events
2023 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கான கடமை ஏற்றல் நிகழ்வு
2023 ஜனவரி 02 ஆம் திகதி கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.G.அருணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் , கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது ஊழியர்களால் தேசிய கீதம் பாடப்பட்டது. மேலும், , “நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு” என்பதனை முன்னிறுத்தி ஊழியர்கள் உறுதியுரை எடுத்துக்கொண்டனர்.





























