கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக திருமதி அமலினி கார்த்தீபன் (SLAS I ) அவர்கள் கடந்த (26.07.2024) வெள்ளிகிழமை அலுவலகரீதியாக தனது கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.
வாகரையில் 30 பெண்களுக்கான பனை பொருள் உற்பத்தி - பயிற்சி நெறி ஆரம்பம்
 
வாகரை பிரதேச செயலகம், பனை அபிவிருத்தி அதிகார சபை மற்றும் GTZ நிறுவனமும் இணைந்து கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்பட்ட வாகரை கிராம சேவகர் பிரிவில் இன்று(01) பனை பொருள் உட்பத்தியினை மேம் படுத்தல் மற்றும் உள்ளுர் உட்பத்தியாளர்களை பயிற்சிவிக்கும் நோக்கோடு 30 பெண் பயணாளிகளை இலக்காக கொண்டு புதிய பயிற்சி நெறிகள் ஆரம்ப்பித்து வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் பனை அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் சிறி விஜயந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பனை அபிவிருத்திக்கான முகாமையாளர் த. விஜயன் உட்பட கோறளைப்பற்று பிரதேச செயலகம் சார்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ச்சியாக 09 மாதங்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த பயிற்சி நெறி மாதமொன்றிற்று 500000 இலட்சம் பெறுமதியான பனை உற்பத்திகளை மேற்கொண்டு நேரடியாக பனை அபிவிருத்தி அதிகார சபையே அப் பொருட்களை சந்தைப்படுத்தும் வாய்ப்புக்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
All reactions:
Amalraj Amirthalingam, Thuvaraka Thirugnanam and 1 other
 
கோறளைப்பற்று வடக்கு வாகரையில் 540 பக்கற் அங்கர் பால்மா வழங்கிவைப்பு
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் (14) இன்று Fonterra கம்பனியின் அனுசரணையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட போசாக்கு அடைவு மட்டத்தில் பின் தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கான 400 கிராம் கொள்ளளவையுடைய 540 அங்கர் பால்மா பக்கற்றுகள் வழங்கிவைக்கும் திட்டத்தின் கீழ் 270 பயனாளிகளுக்கான பால்மா வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ.ஜெ முரளிதரன்; மற்றும் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எந்திரி.ஜீ.அருணன் உட்பட ஏனைய அலுவலகர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
 
கோறளைப்பற்று வடக்கு வாகரையில் 1087.5 கிலோ கிராம் பயறு விதைகள் கையளிப்பு
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் (14) இன்று விவசாய அமைச்சின் அனுசரணையின் கீழ் உப உணவு உற்பத்தியினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 226 பயனாளிகளுக்கான 1087.5 கிலோ பயறு விதைகள் 108 ஏக்கர் பயிர் செய்கை நிலத்தை இலக்காகக் கொண்டு இவ் ஆண்டிற்கான சாகுபடியினை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ.ஜெ முரளிதரன், மாவட்ட விவசாயப்பணிப்பாளர் ஜனாப் எம்.எப்.ஏ.ஸனீர் மற்றும் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எந்திரி.ஜீ.அருணன் உட்பட ஏனைய அலுவலகர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
 

பொங்கல் விழா - 2024

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகமும் சமுக அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த பொங்கல் விழா நிகழ்வானது இன்று (07) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக வழாகத்தில் பிரதேச செயலாளர் அருணன் தலைமையில் வழிபாடு பாரம்பரிய விளையாட்டுக்கள் என பல பாரம்பரிய நிகழ்வுகளுடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக மற்றும் சமுக அமைப்புகளின் பல வகையான பொங்கல் பானைகள் நிகழ்வை அலங்கரித்ததோடு கயிறிழுத்தல்,கோலம் போடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம் பெற்றது.
இதில் அதிதிகள் கிராம மட்ட சமுக அமைப்புகள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது .
 

Subcategories

Scroll To Top