News
- Category: News & Events
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன் தலைமையில் ''நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்'' எனும் தொனிப்பொருளில் இன்று 21.03.2025 காலை 10.00 மணிக்கு வாகரை மத்திய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச மகளீர் சங்கங்கள், சமூகமட்ட அமைப்புக்கள், அரச அதிகாரிகள், பங்குபற்றிய இந் நிகழ்வில் சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு, கலைநிகழ்வுகள் மற்றும் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பு கடன் திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு சமகால டிஜிடல் உலகில் பாதுகாப்பான இணையப்பாவனையின் அவசியம் மற்றும் இணைய மோசடி குறித்த விழிபுணர்வும் கிழக்கு பல்கலைக்கழக சிசேஸ்ட விரிவுரையாளரினால் ஆற்றப்பட்டது.








- Category: News & Events
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் ஒளி விழா நிகழ்வானது இவ்வருடமும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி அர்ச்சனா புவேந்திரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் மிகச் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது.
அதிதிகளினால் மங்கல விளக்கேற்றப்பட்டதை தொடர்ந்து ஜெபத்தோடு ஆரம்பித்த நிகழ்வு ஆடல் பாடல் தேவ செய்தி என மிவும் சிறப்பாக இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச சிறுவர்களால் கரோல் கீதம்,நடனம் போன்ற பல கலைநிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன் , நத்தார் தாத்தா வருகை மற்றும் நிழ்வுகளில் பங்குபற்றி பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்,கணக்காளர் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.









- Category: News & Events
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக்கூட்டம் இன்று (20.08.2024) காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் அர்ச்சனா புவேந்திரன் தலைமையில் இடம் பெற்றது. இன் நிகழ்வில் மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி காயத்திரி மற்றும் பிரதேச செயலக கணக்காளர்,பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், சமூர்த்தி முகாமையாளர் உட்பட ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



- Category: News & Events
20.11.2024 அன்று பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு வாகரை கலாசார மத்திய நிலையத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் வாகரை பிரதேச கலைஞர்கள் மற்றும் சிறுவர்களால் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டதோடு சாதனையாளர்களுக்கான கௌரவிப்பும் வழங்கப்பட்டது
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,சமூக நலன்விரும்பிகள், பிரதேசமட்ட கலைஞர்கள், பாடசாலை அதிபர் மற்றும் பிரசேவாசிகளின் பங்குபற்றுதலோடு இன்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.












- Category: News & Events
மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 2024-2025 ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்பயிர்ச் செய்கை ஆரம்பக் கூட்டம் 2024.09.26 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09.00 மணிக்கு கோறளைப்பற்று பிரதான மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்தீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மேலதிக மாவட்ட செயலாளர்(காணி) திருமதி.என்.முகுந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் ஏனைய அரச உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என்போர் கலந்து கொண்டனர்.



















