පුවත්
- ප්රවර්ගය: News & Events
பலநோக்கு உதவியாளர்களுக்கான தற்கொலை மற்றும் அனர்த்தநிலைமைகளின் போது செயற்படுதல் தொடர்பான ஆற்றுப்படுத்தல் நிகழ்வு 20.07.2022 அன்று வாகரைகலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.









- ප්රවර්ගය: News & Events
வாகரைப் பிரதேச அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்குமான "அருண தகின ரடா" சித்திர ஆக்க நிகழ்ச்சி மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகள் 04.07.2022 அன்று கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.









- ප්රවර්ගය: News & Events
எமது பிரதேச செயலகத்தில் 23.05.2022 அன்று சிறுவர் அபிவிருத்திக்குழுவின் செயலாளரும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தருமாகிய அ.அழகுராஐ் ஏற்பாட்டில் சிறுவர் அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பிரதேச செயலாளர் எந்திரி. க. அருணன் தலைமயில் இவ்வருடத்திற்கான பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.
இவ் விசேட கூட்டத்தில் வாகரை பிரதேசத்தில் தற்கால சூழ்நிலையில் சிறுவர்களின் நலன் ,பாதுகாப்பு , பராமரிப்பு ,கல்வி , அபிவிருத்தி ,தொடர்பில் கலந்துரையாடப்பட்டது .
குறிப்பாக பாடசாலை இடைவிலகலை குறைப்பது தொடர்பாக பாடசாலை வரவுக்குழுவினை ஒன்றிணைத்து கள விஐயம் மேற்கொள்ளல் , தொழில் கல்வியினை ஊக்கப்படுத்தி தொழில் பயிற்சியினை ஏற்படுத்தல் , இளவயது திருமணத்தை குறைப்தற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை பெற்றோர் சமூகத்திற்கு நடாத்துதல் , நிறுவனங்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டினுடாக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தல் , சிறுவர் இல்ல மேற்பார்வைகளை முன்னெடுத்தல் , சிறுவர் சட்ட நடைமுறைகளை அமுல்படுத்தல் போன்ற தீர்மானமங்கள் முன்னெடுக்கப்பட்டது .
இந் நிகழ்வில் வலயக்கல்வி அதிகாரி, சிறுவர் பெண்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச தவிசாளர் , நன்டத்தை உத்தியோகத்தர் , அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , கிராம உத்தியோகத்தர்கள், சிறுவர் பெண்கள் பிரிவு அதிகாரிகள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






- ප්රවර්ගය: News & Events
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏற்பாட்டில் “பாதுகாப்பான இணையபாவனையும், சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுத்தலும் “ எனும் தலைப்பில் 23.06.2022 அன்று கதிரவெளி பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட சிறுவர் சிறுமியர்களுடன் பெற்றோரையும் இணைத்து 100 பேருக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடாத்தபபட்டது .





- ප්රවර්ගය: News & Events
சிறுவர் கழக சிறார்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.




















