வாகரை கலாசார மத்திய நிலையம்  11.03.2022 அன்று உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.இதில் பிரதம அதிதியாக தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரம நாயக அவர்கள் கலந்துகொண்டார்.ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர் குமரஸ்ரீ, வாகரை பிரதேச சபை தவிசாளர் ஆகியோரும்  எமது பிரதேச செயலாளர்,உதவி பிரதேச செயலாளர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர்,கணக்காளர், சக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் முதல் நிகழ்வாக பிரதம அதிதியினால்  கலைஞர்கள் வரவேற்கப்பட்டனர். கலைஞ்சர்களால் கட்டிடடம்  திரை  நீக்கம் செய்யப்பட்டது. பிரதம அதிதியினால் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது. அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றபட்டு  வரவேற்பு உரை பிரதேச செயலாளரால் நிகழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து கலை கலாசார நிகழ்வுகள் ஆரம்பமானது. நிகழ்வின் முடிவில் பங்குபற்றிய மாணவர்களுக்கான கலாசார உபகரணங்கள் விழங்கிவைக்கப்பட்டன.

 

WhatsApp Image 2022 03 11 at 20.32.13

 

WhatsApp Image 2022 03 11 at 20.32.17

   
   

 

vWhatsApp Image 2022 03 11 at 20.32.19

 

புதிதாக நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி 29.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று எமது பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது இதில் உதவி மாவட்ட அதிபர் நாவேஸ்வரன் அவர்களும் மாவட்ட உற்பத்தித்திறன் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு புவனேந்திரன்   அவர்களும் கலந்துகொண்டனர்.

 

c738f609 fbc4 4a78 b27e 58efad411348

எமது பிரதேச செயலக மகளீர் தின நிகழ்வுகள் 08.03.2022 அன்று வாகரை கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக எமது  பிரதேச செயலாளர் திரு எந்திரி G. அருணன் அவர்கள் கலந்துகொண்டார் மற்றும் எமது  பிரதேச செயலக கணக்காளர் திரு ஜோஜ் ஆனந்தராஜ், அகம் நிறுவன அதிகாரிகள், மாதர் சங்க உறுப்பினர்கள் மேலும் பலர் கலந்துகொண்டனர். இதன்போது வாகனங்களில் மகளீர் தினத்தை குறிக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன, அத்தோடு பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.நிகழ்வின் முடிவில் பிரதேசத்துக்கு முன் உதாரணமாகத்திகழும் பெண்களுக்கான கௌரவிப்பும்  பாராட்டுகளும் வழங்கப்பட்டது அத்தோடு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் 5 பெண்களுக்கான உதவி  தொகை ஒன்றும் வழங்கப்பட்டது.

අනු-ප්‍රවර්ගයන්

Scroll To Top