76 வது சுகந்திர தின நிகழ்வும் 'சுவதரணி மூலிகைப் பயிர் வாரமும்'
எமது நாட்டடின் 76 வது சுதந்திர தின நிகழ்வு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் G.அருணன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்,கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர்; மற்றும் ஏனை அலுவலக உத்தியோகத்தர்கள், கலந்து கொண்டனர்.
தேசியகொடியேற்றல், தேசிய கீதம் இசைத்து மரியாதை செலுத்தலோடு ஆரம்பித்து எமது தேசத்தின் சுதந்திரம் பற்றியும் நினைவு கூறப்பட்டது.
தொடர்ச்சியாக வளமிக்க நாட்டை உருவாக்கும் நோக்கோடு எமது நாட்டின் பிரதமரினால் முன் மொழியப்பட்ட 'சுவதரணி மூலிகைப் பயிர் வாரம்' எனும் தொனிப்பொருளில் கடந்த 02.02.2024 இல் எமது 16 கிராம சேவகர் பிரிவிலும் ஆரம்பிக்கப்பட்ட மூலிகைக் கன்றுகள் நடும் திட்டத்தின் தொடர்ச்சியாக அலுவலக வழாகத்தினுள் எமது உத்தியோகத்தர்களினால் மூலிகைப் பயிர்கள் நடப்பட்டது.
 
   
2024 ஆம் ஆண்டு – கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்.
பிறந்துள்ள புத்தாண்டு 2024ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வானது கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் க.அருணன்அவர்கள் தலைமையில் 2024.01.01 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது.
சம்பிரதாயபூர்வமாக தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் பாடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் நாட்டுக்காக உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி நினைவுகூறப்பட்டது. தொடர்ந்து உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாண உறுதியுரை ஏற்றுக்கொண்டதுடன் பிரதேச செயலாளர் அவர்களால் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வலுவான எதிர்காலத்திற்கான நல்லதொரு ஆரம்பம் எனவும் குறிக்கோள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் பிரதேச செயலாளரினால் உரையாற்றப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் கு.பிரணவன் , பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அ .சுதர்சன், நிருவாக உத்தியோகத்தர் வ . சிவரஞ்சன், சமுர்த்தி முகாமையாளர் க.கலைவாணி உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
 
   
 
      
 
 
   
 
 
 
 
 
 
 
 
 
 
சர்வதேச மகளிர் தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு.எந்திரி G.அருணன் அவர்களின் தலைமையில் வாகரை கலாசார மண்டபத்தில் (08.03.2023) நடைபெற்றது.
இந் நிகழ்வின் போது மகளிர் சங்க உறுப்பினர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு அவர்களுக்கான பரிசில்களும்,சிறந்த மகளிர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
அத்தோடு சுயதொழில் முயற்சியினை ஊக்குவிக்கும் முகமாக பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களும் மகளீருக்கான எல்லே போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம் பெற்ற எமது வீராங்கனைகளுக்கான கெரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு.G.பிரணவன், கணக்காளர் திருமதி.C.ஜெயந்திரா,
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி கலைவாணி. சமூக சேவை உத்தியோகத்தர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. N.ரமேஷ், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 

 

சித்திரை புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையில் வம்மிவட்டவான் விளையாட்டு மைதானத்தில் 19.04.2023 அன்று இடம்பெற்றது. அதன் சில பதிவுகள்...

 

 

 

 

ny14Ny1

 

 

ny14

ny2

ny4

ny5

ny8

ny10

ny9

ny15

 

ny19

ny19

 

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கௌரவ ஆணையாளர் உடனான சந்திப்பு

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கௌரவ ஆணையாளர் Mr .Namal Liyanage வாகரை பிரதேசத்திற்கு கள விஐயத்தினை மேற்கொண்டார்.அவருடன் Miranda Amstrong - chief of child protection, Andrew- consultant UNICEF.  ஆகியோர் வருகைதந்தருந்தனர்

பிரதேச செயலாளர் எந்திரி. G. அருணன் தலைமயில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் A.அழகுராஐ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச சிறுவர்சபை சிறார்களால் வரவேற்கப்பட்டனர்.

இவ் விஐயத்தின் போது ஏற்கனவே unicef அனுசரனணயுடன் PPC நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 30 நலிவுற்ற குடும்பங்களுக்கு 40000/= ௹பாய் பெறுமதியான உலர் உணவு> கற்றல் உபகரணங்கள் மற்றும் 07 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதை பார்வையிட்டதுடன்  தொடர்ச்சியான சிறுவர்  முன்னேற்றம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு ஊடாக வாகரை பிரதேச சிறுவர் பாதுகாப்பு செயற்பாடுகள் , எதிர்நோக்கும் பிரச்சனைகள் , சவால்கள் என்பன தெளிவுபடுத்தப்பட்டது .

WhatsApp Image 2023 02 02 at 2.31.46 PMWhatsApp Image 2023 02 02 at 2.31.46 PM 1WhatsApp Image 2023 02 02 at 2.31.47 PMWhatsApp Image 2023 02 02 at 2.31.47 PM 1WhatsApp Image 2023 02 02 at 2.31.48 PMWhatsApp Image 2023 02 02 at 2.31.48 PM 1WhatsApp Image 2023 02 02 at 2.31.49 PMWhatsApp Image 2023 02 02 at 2.31.49 PM 1

Facebook

IMG 20230110 WA0020

உட்பிரிவுகள்

Scroll To Top