செய்திகள்
- பிரிவு: News & Events
குஞ்சங்குளம் ஆதிவாசிகள் கலாசார மண்டபம் பெற்றோர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு - ( multimedia உடனான திரையில் video ஒளிபரப்பப்பட்டு , மகிழ்ச்சியான குடும்பம், இளவயது திருமணம் , பாடசாலை கல்வி , மதுபாவனை பிரச்சனை , பெற்றோர் வெளிநாடு செல்வது) தொடர்பான தெளிவூட்டல் பெற்றோருக்கான பரிசு வழங்கள் கலை நிகழ்வும் என்பன 5.00 pm - 8.30pm இடம்பெற்றது . (இந்நிகழ்வில் குஞ்சங்குளம், மதுரங்கேணி இருந்து 180 பெற்றோர்கள் 20 சமூககுழு உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது .




- பிரிவு: News & Events
பிரதேச மகளீர் மற்றும் மாதர் சங்க உறுப்பினர்களுக்கான "பெண்களும் தலைமைத்துவம் "தொடர்பான இரு நாள் செயலமர்வு மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏற்பாட்டில் 02.08.2022 மற்றும் 09.08.2022 இரு தினங்களும் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.








- பிரிவு: News & Events
“ஒரு நாளில் உன்னை மகிழ்விப்போம் “ எனும் தொனிப்பொருளில் பிரதான நிகழ்வு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் மதுரங்கேணிகுளம், குஞ்சங்குளம் ஆகிய கிராமங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகதருக்கான மாவட்ட இணைப்பாளர் வீ. குகதாசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரனின் வழிகாட்டலில் பிரதேசசெயலாளர் க.அருணன் தலைமையில், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.அழகுராஐ் ஏற்பாட்டில் நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது .
இந்நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் வாழும் சிறுவர்களுகள் எதிர்நோக்கும் சவால்கள், அவர்களின் பாதுகாப்பு , சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்தல் , வீட்டை அடிப்படையாக கொண்ட பராமரிப்பின் முக்கியத்துவம் , திணைக்களத்தினுடைய மாற்றுப் பராமரிப்பு தேசிய கொள்கை திட்டம் , சிறுவர் பங்கேற்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு சிறுவர்களுக்கு எதிராக ஏற்படக்கூடிய சகலவிதமான துன்புறுத்தல்களையும் குறைக்கும் அல்லது தடுக்கும் வகையிலாக சமூக மட்டத்திலே கட்டமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தும் வகையில்
“கிராமிய மட்ட சிறுவர் அபிவிருத்தி குழு “ மற்றும் “சிறுவர் கழகங்களை “ மீழமைப்புச் செய்வதும் , சிறுவர்களுக்கான படைப்பாக்க திறன் மற்றும் வாழ்க்கைத்தேர்ச்சி சம்பந்தமான பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும்
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்ற இந்நிகழ்வில் இரு நூறு பெற்றோர்கள்,நூறு சிறுவர்கள் என பங்கு பெற்றிருந்தனர் அனைத்து சிறுவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர்.






- பிரிவு: News & Events
வட்டவான் “வளர்நிலா “சிறுவர் கழக கலை நிகழ்வும் சிறார்களுடனான பிரதேசசெயலாளர் , உதவிப் பிரதேசசெயலாளர், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களுடனான சந்திப்பும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏற்பாட்டில் 22.07.2022 அன்று இடம்பெற்றது.































